--- --:--:-- --

திருமணத்தை மீறிய உறவு! தொல்லை கொடுத்தவரை கணவரின் உதவியோடு தீர்த்துக் கட்டிய பெண்

5

திருமணத்தை மீறிய உறவை சுட்டிக்காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கணவருடன் சேர்ந்து பெண்ணே கொலை செய்து புதைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் ஆந்திராவை சேர்ந்த மாதேஸ்வரி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி மாதேஸ்வரிக்கு, கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது மாதேஸ்வரியின் கணவர் சிவகுமாருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

அதன்படி ஆந்திராவுக்கு வரவழைத்த மாதேஸ்வரி கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து அவரை கொலை செய்து வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டார். இதனிடையே கார்த்திகேயனை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் கார்த்திகேயனுக்கு மொபைலில் வந்த கடைசி அழைப்பை வைத்து மாதேஸ்வரியை கைது செய்தனர். மேலும் கார்த்திகேயனின் உடலை தோண்டி எடுத்து சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon