--- --:--:-- --

கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரொனா…ஆடுகளுக்கு நடத்தப்படும் பரிசோதனை..!

11

கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வளர்த்து வந்த ஆடுகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனகர். கர்நாடகாவில் துமகரா மாவட்டம் சிக்கன நாயக்கன கலி என்ற கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் அவர் வளர்த்து வந்த வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பிற விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்போர் அஞ்சுகின்றனர். கால்நடைகளுக்கு தொற்று பரவாது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயினும் , அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஆடுகளுக்குக் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

ஆடுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் பெங்களூருவில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சில மாதிரிகள் போபாலில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

 

ஏற்கனவே நியூயார்க்கில் வனவிலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரொனா பரவியது. நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வனவிலங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon