--- --:--:-- --

ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..!

10

கோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன்.

 

இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில்ரக்ஷா பந்தன் விழா இந்த ஆண்டு இன்றும், சில பகுதிகளில் நாளையும் கொண்டடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ரக்ஷா பந்தன் விழா, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.

 

இதற்காக ‘Thanks Jawan’ என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளாமன இஸ்லாமியப் பெண்கள், தாங்களாகவே ராக்கி கயிறுகளை தயாரித்து ராணுவ வீரர்களின் மணிக்கட்டில் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியான சம்பா செக்டரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஏராளமான பள்ளிச் சிறுமிகள், ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறு அணிவித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

 

வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம். இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள்.

 

சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

Right Menu Icon