பொள்ளாச்சி அருகே தடைசெய்யப்பட்ட 586 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர் !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு சொந்தமான குடோனில் அப்துல், ராஜா இருவரும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அந்த குடோனிலிருந்து தமிழக அரசு தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும், ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதனையடுத்து அப்பகுதிக்கு உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டபோது குடோனில் தடை செய்யப்பட்ட 586 கிலோ பான் மசாலாக்கள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 8 லட்சம் என தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே குடோன் வாடகைக்கு எடுத்த அப்துல் மற்றும் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.






