தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீடிக்கும்..!
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் 22 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






