--- --:--:-- --

கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

11

திரிசூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் அந்த மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

 

இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மருத்துவ மாணவர்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பின்னரும் மாணவர்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேலும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

இதில் மாணவர்களுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 50 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதுகலை படிக்கும் 10 மாணவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தடுப்பூசி போட்ட பின்பும் அவர்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ நிபுணர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 60 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon