--- --:--:-- --

மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட சினிமா நடிகை கைது..!

13

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட சினிமா துணை நடிகைகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது .

 

இந்த பண்ணை வீட்டில் இரவு நேரத்தில் மது போதையில் ஆண்களும் பெண்களும் ஆட்டம் போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்கள் மது போதையில் ஆண்களுடன் சேர்ந்து நடனம் ஆடியதை பார்த்துள்ளனர்.

 

போலீசாரின் விசாரணையில் ராமப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் குமார் சினிமா துணை நடிகை கவிதாசியுடன் இணைந்து இரவு நேர மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அரசு உத்தரவை மீறி மது விருந்து நடத்திய துணை நடிகை உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon