பஞ்சலிங்க அருவியில் இன்று குளிக்க அனுமதி..!
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதாலும், வானம் மேகங்கள் இன்றி தெளிவாக உள்ளதாலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல இன்று அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.





