சாலையோர வியாபாரிகளுக்கு பதிவுக்கட்டணம் ரத்து..!
சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் 100-ஐ ரத்து செய்ய FSSAI ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
உணவு தயாரிப்பின்போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அவர், பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் இணைந்து சாலையோர வியாபாரிகள் பயன்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.





