ராகுல் காந்தி பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பங்கேற்றதில்லை
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் ஒருமுறைகூட பங்கேற்காத முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஜேபி நட்டா ராகுல்காந்தி இதுவரை பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் ஒரு முறை கூட பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் தொடர்ந்து நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பும் ராகுல்காந்தி தேசத்தை மனச்சோர்வடைய வைப்பதாகவும் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவர் இதுபோன்று செய்ய மாட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்களை புரிந்துகொள்ள தகுதியான பல உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளதாகவும் ஆனால் வாரிசு குடும்பம் அத்தகைய தலைவர்களை வளரவிட்டதே இல்லை என்றும் சாடினார்.







