--- --:--:-- --

புதுக்கோட்டை சிறுமி உயிரிழப்பு – குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதியுதவி..!

3

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினரே குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் குழந்தையின் இறப்பு பெற்றோரால் ஈடுகட்ட முடியாத இழப்பாக உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு பல்வேறு அமைப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.

 

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் தொகை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon