--- --:--:-- --

பிரபல குடல் அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரமோகன் உயிரிழப்பு..!

1

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவின் ஓய்வு பெற்ற இயக்குனர் மருத்துவர் சந்திர மோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. தேசிய அளவில் குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் பிரபலமானவர்.

 

சந்திரமோகன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவில் இயக்குனராக பணியாற்றி கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வந்த சந்திரமோகன் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனது பணியை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவர் சந்திரமோகன் உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon