--- --:--:-- --

பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. கத்திரிக்கோலால் குத்திய சம்பவம்..!

5

நெல்லை மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் மதுபோதையில் பெண்ணின் வீடு புகுந்து பெண் மற்றும் பெண்ணின் தாயை கத்திரிக்கோலால் தாக்கியதுடன் தானே விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார்.

 

அன்னை நகர் பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருபவர் அந்த பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகளை பெண் கேட்டு சென்றுள்ளார். அவரது நடத்தை காரணமாக பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அவர் தாயாரையும் பெண்ணையும் அவர்கள் தனியாக இருந்த பொழுது கத்தரிக்கோளால் தாக்கி கொலை செய்ய முயன்று தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon