ஓட்டுநரே இல்லாமல் தானாக சென்ற ஆட்டோ..!
பழனி அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ தானாக நகர்ந்து சென்ற காட்சிகளும், உரிமையாளர் வாகனத்தின் பின்னே வரும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் நெய்க்காரப்பட்டியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ஆட்டோ ஒன்று காற்றின் அழுத்தத்தால் தானாக நகர்ந்து சாலையில் குறுக்கே சென்றது.
வாகனம் நகர்வதை கண்ட உரிமையாளர் வாகனத்தை பிடிக்க அதன் பின்னே ஓடிச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





