5.5 அடி உயரத்தில் எஸ்பிபிக்கு சாக்லேட் சிலை வடிவமைப்பு..!
இனிய குரலால் மக்களை தொட்ட எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் சுமார் 6 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டது. மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தனது இனிமையான குரலால் மட்டுமல்ல.
இனிமையான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர். அதனால் தான் என்னவோ அவருக்கு சாக்லேட்டை கொண்டே சிலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் புதுச்சேரியில் உள்ள சாக்லேட் தயாரிப்பாளர் ராஜேந்திரன்.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி இவர் 339 கிலோ சாக்லெட் கொண்ட 5.8 அடி உயரத்தில் எஸ்பிபி சாக்லேட் சிலையாக வடிவமைத்து உள்ளார்.
பிரபலங்களின் முகங்களை சாக்லேட்டால் வடித்துள்ளார். இவரின் கை திறனில் மறைந்த பாடகர் எஸ்பிபி சிலையாக வடிவமைத்திப்பதை கண்டு பலரும் ஆர்வத்துடன் சிலையுடன் செல்பி எடுத்து வருகிறார்கள்.







