தீபாவளி வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்..!
தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தீமையை நன்மை வெற்றி கொள்வதே இந்த தீபத்திருவிழா உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சியான பாதுகாப்பான தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இருளை அகற்றி தீப ஒளி ஏற்றி இந்த திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி நன்னாளில் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தீபாவளியை ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். பன்முகம் கொண்ட இந்தியாவில் மத உணர்வுகளைக் கடந்து இந்தியர்கள் என்பதை உணர்ந்து உலகிற்கு உணர்த்தும் விதமாக தீபாவளி திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை வல்லரசாக்க அனைவரும் ஒற்றுமையோடு பாடுபடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இருள் விலகி இன்ப ஒளி நிறைய வாழ்த்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அனைவரும் ஆனந்தமாக வாழ தீபாவளித் திருநாள் வழிகாட்டியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரனும் வாழ்த்துக்கள்தெரிவித்துள்ளனர்.





