இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்..!
அரியலூர் மாவட்டத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சனிக்கிழமை அன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் காளான்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பகுதியில் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர்.
அங்கு இரு பெண்களும் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்ததை அவர்கள் கண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்த நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





