குடிபோதையில் நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர்..!
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு அந்த காவலருக்கு எவ்வாறு ஜாமீன் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
தவறாக நடக்க முயன்ற நபருக்கு ஜானின் வழங்கிய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் சங்கரன்கோவில் பேருந்து நிலைய சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய தென்காசி எஸ்பிக்கு ஆணையிட்ட நீதிபதிகள் விசாரணை வருகிற வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தனர்.






