--- --:--:-- --

சைக்கிளில் சென்ற முதியவரை கன்னத்தில் அரைந்த போலீஸ்!

35

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் நீதிமன்ற வளாகம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது காவலர் ஒருவரின் இருசக்கர வாகனம் மோதி விட்டது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நடுரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

சென்னையில் அரும்பாக்கம் மார்க்கெட் அருகில் மாத்திரை வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அடித்து இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றியதால் களேபரம் ஆனது.

 

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கச்சு நாட்டையை உலுக்கிய நிர்பயா வழக்கை விட கொடூரமானது இது என தெரிவித்துள்ளார். இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவர்களை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon