அதிவேக காற்றில் சிக்கி கொண்ட போலீஸ் அதிகாரி..!
சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் திடீரென உருவான அதிவேக காற்றில் சிக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் தடுமாறிக் கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. சியார்சியாவா கிராமத்தில் நடந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக அந்த காவல் அதிகாரி 3:00 மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அதிவேக காற்று அடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த அதிகாரியால் ஒரு அடிகூட நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி சென்றுள்ளார்.
அந்த அதிகாரி அப்படியே காற்றில் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.அந்த சமயம் வினாடிக்கு 42 மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







