--- --:--:-- --

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள்..!

5

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி, வைகோ, தொல் திருமாவளவன், கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஸ்டாலினுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

 

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் அந்த கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

இதேபோல் மு க ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon