--- --:--:-- --

பிரதமர் இன்று தமிழகம் வருகை..! 5 அடுக்கு பாதுகாப்பு..!

1

சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி 33 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு டிரோன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு தனி விமானத்தில் இன்று மாலை 5.10 மணிக்கு வருகை தருகிறார்.

 

விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமரை நேரில் வரவேற்கின்றனர். அதன் பின்னர் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். ரயில்வே துறையின் சார்பாக 2,900 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.

 

எழும்பூர் ரயில் நிலையம் நவீனமயமாக்கும், தாம்பரம் செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடம் தொடக்கம் மதுரை, தேனி அகல ரயில் பாதை சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

Right Menu Icon