மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக..!
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணி 4 எம்பிக்களையும், அதிமுக இரண்டு 2 எம்பிக்களையும் பெற முடியும். திமுக 3 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
அதிமுகவில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சி தலைமை அறிவித்திருந்தது. அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் பேரில் ஆட்சிமன்ற குழு பரிசோதனை செய்து எடுத்த முடிவின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





