பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் உத்தரவு..!
பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனையை வழங்கவும், பாலியல் வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறப்படுகிறது.






