காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழுக் கொள்ளளவை எட்டிய 213 ஏரிகள்..!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 213 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
இதனால் அந்த மாவட்டங்களில் மொத்தம் 909 ஏரிகளில் 213 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 288 ஏரிகள் 75 சதவீதமும் தொடர்ச்சி 196 ஏரிகள் 50 விழுக்காடும் நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எஞ்சியுள்ள 181 ஏரிகள் 25 விழுக்காடு அளவுக்கு நிரம்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
செயல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 82 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.
190 ஏரிகள் 75 சதவீதமும், 101 ஏரிகள் 50 விழுக்காடும், 129 ஏரிகள் 25 சதவீதமும், 26 ஏரிகள் 25 விழுக்காடு குறைவாக நிரம்பியதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.






