குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் : பிரதமர் மோடி இரங்கல் …நிதி உதவி அறிவிப்பு!!
குஜராத் தலைநகர் ஆக மதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 8 நோயாளிகள் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
நிதியுதவி
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து பற்றிய செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது குறித்து குஜராத் முதல்வரிடம் பேசியுள்ளதாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார். தீ விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ள பிரதமர் மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.







