--- --:--:-- --

இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை..!

9

இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இலங்கையில் கொரொனா அச்சத்திற்கு இடையே புதிய பிரதமரை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது.

 

பலமுறை போட்டி நிலவும் சூழலில் நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதிபர் கோத்தபாய ராஜபக்ச, கொழும்பு நுகை கடையில் உள்ள பங்கிரி பக்த விவேக ராமையா விகாரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், திருகோணமலையில் தனது வாக்கை பதிவு செய்தார் . தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தமது வாக்கை கொழும்பில் செலுத்தினார்.

 

கொரொனா காரணமாக ஒரு மணி நேரம் கூடுதலாக மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பெட்டிகள் நாடு முழுவதும் உள்ள 66 மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கி விடும் வாக்கு எண்ணிக்கை கொரொனா காரணமாக மறு நாளான இன்று நடைபெறுகிறது.

 

இன்று பிற்பகல் 2 மணிக்குள் முடிவுகள் தெரியவரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் அடுத்த ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon