தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..! கம்பி வயிற்றில் குத்தி படுகாயம்..!
மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் இருந்த கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மதுரை வைகை ஆற்று பாலத்தில் இருந்து ஒரு வாலிபர் காலையில் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கம்பியில் சிக்கிய அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர். அவர் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடுவதை பார்த்த மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதற்கட்ட போலீசார் விசாரணையில் அவர் பெயர் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக 20 நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.







