--- --:--:-- --

தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள கிணற்றில் பெட்ரோல்..!

5

மிழக கேரள எல்லைப் பகுதியான புலியூர் சாலையில் ஒரு வீட்டின் கிணற்றிலிருந்து தண்ணியுடன் பெட்ரோல் கலந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணசமூடு புலியூர் சாலை பகுதியில் கோபி என்பவரின் வீட்டின் முன்பக்கம் உள்ள கிணற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் நாற்றம் வந்துள்ளது.

 

இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை இறைத்து தீயை பற்ற வைத்து சோதித்துப் அப்போது தண்ணீர் தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

இதற்கான காரணம் தெரியாத நிலையில் கோபியின் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் சேமிப்புகலன் பாதிக்கப்பட்டதால் பெட்ரோல் கசிந்து கிணற்றில் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதுகுறித்து கேரளாவின் பாரசாலை காவல்துறையினரும், கன்னியாகுமரியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon