--- --:--:-- --

டிரம்ப் விடுத்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்த ஜோபைடன்..!

6

மெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்கி அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே 15 நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

 

அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகளாகும். இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றி முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த தடையை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

 

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திருநங்கைகள் ராணுவத்தில் சேர வழிவகை செய்தார். இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் நீக்கினார்.

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அனைத்து இன மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என்று உலகளவில் அமெரிக்கா வலிமையான அனைவருக்கும் ஏற்ற நாடு அதில் ராணுவம் எந்த விதத்திலும் சளைத்ததில்லை என கூறியுள்ளார்.

 

பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon