--- --:--:-- --

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவி 4 ஆயிரம் வழங்க மனு..!

8

மிழக அரசின் நிவாரண நிதி உதவி 4 ஆயிரம் ரூபாயை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்த கிரேஸ்வானு தாக்கல் செய்த மனுவில் ரேஷன் அட்டையோ, அடையாள அட்டையோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த உதவி தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

இதனையடுத்து மனுவிற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon