இனி வீட்டிலேயே கொரொனா பரிசோதனை செய்து கொள்ளலாம்..!
வீட்டிலேயே சுயமாகக் கொரொனா பரிசோதனை செய்து கொள்வதற்கான சாதனங்கள் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
ரேட் கிட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரேட் கிட்டில் கொரோனாவால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உடனடியாக பரிசோதனையின் முடிவுகளை 15 நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொபைல் ஆப் மூலம் விற்பதற்காக சில நிறுவனங்கள் முன்வந்து இருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 7 லட்சம் மருந்து கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.






