நிலவினை துல்லியமாக படம்பிடித்த சிறுவன்..!
புனேவை சேர்ந்த சிறுவன் 50 ஆயிரம் படங்கள் மூலம் நிலவின் துல்லியமாக தோற்றத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் புனேவில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். வானியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளதால் வானியல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கற்று வந்துள்ளான்.
கொரொனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட சிறுவன் சுமார் 5 மணி நேரம் டெலஸ்கோப் மற்றும் கேமராவை பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துள்ளார்.
அந்த படங்களை 40 மணிநேரம் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் துல்லியமான தெளிவான முப்பரிமான நிலவின் படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அந்த சிறுவன் எடுக்கப்பட்ட 38 வீடியோவில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை தேர்வு செய்து பின்னர் அவற்றைத் தொகுத்து தான் முழு நிலவின் தெளிவான படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும், இந்த படத்தை ஒருவர் எவ்வளவு ஜூம் செய்து பார்த்தால் நிலவின் பகுதி தெளிவாக தெரியும் என்று தெரிவித்தார்.




