கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை புதைக்க அனுமதி மறுப்பு..!
ஈரோடு அருகே கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை புதைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சடலத்தை ஊர் ஊராக மகன் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் ரவி வர்மனின் தாய் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களின் வழக்கப்படி உடலைப் எரியூட்ட வேண்டியிருந்ததால் சுகாதார ஆய்வாளரின் அனுமதிபெற வேண்டும். இதற்காக ரவிவர்மன் சுகாதார ஆய்வாளர் ஜீவானந்தம் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் உடலை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று உள்ளார். ரவிவர்மன் கடைசியில் இடுகாட்டில் சங்கீதாவின் உடலை புதைக்க அனுமதி கிடைக்கவே இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டன.




