--- --:--:-- --

தமிழகத்தின் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் ..!

5

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் உள் மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 19ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நீலகிரி, சேலம், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தனுஷ்கோடி வரை கடல் அலை சுமார் இரண்டரை மீட்டர் உயரம் வரை மேல் எழும்ப கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon