ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்..!
சென்னையில் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் தங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது. இந்த நிலையில் சென்னை டாக்ஸ் டிவி சேனலில் வெளியான அனைத்து வீடியோக்களை நீக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







