ஆதார் அட்டையை புதுப்பிக்க குவிந்த மக்கள் ..டோக்கன் வழங்காமல் படுத்துறங்கிய அதிகாரி..!
புதுப்பேட்டை அருகே துணை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க வந்த மக்களுக்கு டோக்கன் வழங்காமல் மாத்திரை போட்டு படுத்துக்கொண்ட ஆண் அலுவலரால் மக்கள் அவதி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்ட நாற்றம்பள்ளி எடுத்த புதுப்பேட்டை துணை அஞ்சலை அலுவலகத்தின் ஆதார் அட்டையை திருத்தம் செய்யவும் புகைப்படம் எடுக்கவும் ஏராளமான மக்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர்.
அப்பொழுது அங்கிருந்து அலுவலர் சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு மாத்திரையை போட்டு படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக பதிலுக்கு வராமல் அலைகழிப்பதாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





