--- --:--:-- --

ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த பணத்தை அள்ளிச் சென்ற மக்கள்..!

2

மெரிக்காவில் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு பணம் கொண்டு சென்ற டிராக்கில் இருந்து சாலையில் கொட்டிய பணத்தை வாகன ஓட்டிகளும் மக்களும் அள்ளி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். உயிருடன் இருக்கும் மனிதர்கள் சும்மாவா விடுவார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் டிரக்கில் பணம் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது எதிர்பாராமல் டிரக் திறந்ததில் பணக்கட்டுகள் சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

டிரக் அந்த இடத்தை கடந்து சென்ற பிறகு நெடுஞ்சாலையில் பயணித்த மக்கள் சாலையில் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைவரும் வாகனங்களை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க அலைமோதி உள்ளனர்.

 

இதனை வீடியோவாக எடுத்து வந்திருந்த பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் இது மிகவும் வினோதமான நிகழ்வு யாரோ பணத்தை சாலையில் போட்டு விட்டு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Right Menu Icon