--- --:--:-- --

உயர்ந்து கொண்டே செல்லும் தக்காளியின் விலை..!

3

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

 

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் வரத்திற்கு ஏற்ப விலைகளும் நாள் அதிகரித்து வருகிறது.

 

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 140 ஆக உள்ளது. இதை போன்று வெங்காயம் கிலோ 40 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில் பீன்ஸ், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

 

எனினும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மட்டும் அதிகரித்துள்ளதாகவும் வரத்தைப் பொறுத்து அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Right Menu Icon