--- --:--:-- --

மூச்சுத்திணறலோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்..! மதுரையில் அதிர்ச்சி..!

5

ருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கும் முன்னரே ஆக்சிசன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு பொது மருத்துவமனையில் காணப்படும் காட்சிகள் மூச்சுத்திணறல் உடன் வரும் நோயாளிகளுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் வைத்து ஆக்சிசன் வழங்கப்படுகிறது.

 

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிகபட்சமாக 3542 கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி பாதிப்பு சராசரியாக 500 க்கும் அதிகமாக உள்ளது.

 

ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரொனா உறுதி செய்யப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கும் முன்னரே பெரும்பாலோனோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

வெளிநோயாளிகள் பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 28 ஆயிரத்து 460 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு 24 ஆயிரத்து 33 பேர் குணமடைந்துள்ளனர்.

 

மதுரை அரசு மருத்துவமனையில் 848 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் உள்ள நிலையில் 502 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon