--- --:--:-- --

நாடு முழுவதும் பாஸ்டாக் நடைமுறை அமலாகியுள்ளது..!

6

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் முழுமையாக பாஸ்டாக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரி செலுத்தும் போது கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்க கூடுதல் நேரம் நடப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

 

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரம் விரயமாகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முறையை கொண்டு வந்தது.

 

இந்த நடைமுறையின் படி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பொருத்தப்பட்டிருக்கும் பாஸ்டேக் கோடை ஸ்கேன் செய்தால் தானாகவே வாகன உரிமையாளர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும்.

 

அனைத்து வாகனங்களுக்கும் இந்த நடைமுறைக்கு கொண்டு வராத நிலையில் ஏற்கனவே ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

 

இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon