--- --:--:-- --

டெல்லியில் அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து மூட உத்தரவு..!

4

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு இருப்பதால் டெல்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 15ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை பள்ளிகள் மூடப்படும் என்று 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் பள்ளிகளை மூடுவதற்கான அறிவிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடவேண்டும் என்றும் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Right Menu Icon