நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நூதன போராட்டம்..!
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘இன்டியா’ (INDIA) கூட்டணி எம்.பி.க்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உண்டியல்களில் பணம் போடும் வகையில் நூதன முறையில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



