திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது…!
திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் தனி நபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கும் நிலையில் ஆந்திர மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.







