விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?
விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரொனா அறிகுறி இருப்பின் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் கட்டாயம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து விமானம் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சோதனையில் கொரொனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவர் என்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் ஏழு நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை பதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்திற்குள் வெளிநாட்டுக்குசென்று திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







