பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பிரதமர் குறிப்பிட்ட 5 விஷயங்கள்!
கொரொனாவின் தாக்கத்தை குறைக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் முதலீடு, கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்திய தொழில்களின் கூட்டமைப்பான சிஏஏவின் வருடாந்திர கூட்டத்தில் தொடக்க விழாவில் பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார்.
அப்போது இந்தியாவை அதிவேக வளர்ச்சியின் பாதையில் மீண்டும் கொண்டு சென்று தற்சார்புள்ள நாட்டை உருவாக்க நோக்கம் அனைவரையும் உள்ளடக்குதல், முதலீடு, கட்டமைப்பு மற்றும் புதுமைகள் புகுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.
தங்களை பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக எடுக்கப்படும் முடிவுகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அது திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த, தொடர்புடைய நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
முடிவுகளை எடுத்து அவற்றை செயல்படுத்துவதற்கான தைரியம் இருப்பது தான் சீர்திருத்தம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செலுத்துவது தங்களது குறிக்கோள்களில் ஒன்று என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.







