முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதி..!
கொரொனா பரவலை கட்டுபடுத்த பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரொனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூர் செல்ல வரும் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்ற சிஆர்பிஎஃப் மற்றும் தமிழக காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசி மையம் அமைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.






