வாய்க்காலில் குளிக்க சென்ற வாலிபர் மாயம்..! இரண்டு நாளாக மீட்பு பணி..!
பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்ற வாலிபரை போலீஸார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கல்லுப்பட்டியில் சேர்ந்தவர் ரங்கராஜ் இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் காலை பொங்கலூர் வந்த அவர் அங்குள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்தும் முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசார் ரங்கராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாயமான ரங்கராஜ் கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை நிறுத்திய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீண்டும் தேடும் பணியை துவக்கினார்.
இந்த நிலையில் 2-வது நாளாக காலை முதல் இரவு வரை தேடியும் ரங்கராஜனை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தீயணைப்பு துறையினர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசார் கூறுகையில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் ரங்கராஜை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தேடும் பணி துவங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். வாய்க்காலில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு நாளாகியும் மீட்க்கப்படாத சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






