25ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
வீட்டு வரி முதல் மின் கட்டணம் வரை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தமிழக அரசை கண்டித்து 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு சட்டமன்ற தேர்தலில் திமுக முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆகியவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.





