--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!

6

மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் மித்ரா அமைப்பு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

அதன்படி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மித்ரா பூங்கா அமைய உள்ளது. இந்நிலையில் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தென்தமிழ் நாட்டின் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழகம் தயாராக இருக்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon